குண்டு பெண்கள் சொர்க்கத்திற்கு செல்ல மாட்டார்கள் என்று கூறிய பாதிரியாரை தள்ளி விட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.
பிரேசிலின் பாட்ரே மார்சிலே ரோஸி நகரில் பாதிரியார் ஒருவர் பிரம்மாண்ட மேடையில் பேசிக்கொண்டிருந்தார். தன் கரங்களுக்கு இயேசுவுக்கு சொந்தமானது என்று பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு பின்னால் 32 வயதுடைய ஒரு பெண் ஒருவர் ஓடி வந்து அவரை கீழே தள்ளிவிட்டார். சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் நேரில் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் அங்குள்ளவர்களுக்கு அதிர்ச்சியளித்தது.
சமூக வலைதளங்களில் பாதிரியாரை தள்ளி விடும் காட்சி வைரலாக பரவியது. குண்டு பெண்கள் சொர்க்கத்திற்கு செல்ல மாட்டார்கள் என்று பாதிரியார் பேசினார். இதற்காக தான் அந்த பெண் தள்ளி விட்டதாக தகவல் பரவியது. இந்நிலையில் அந்த அந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். அப்போது தான் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிய வந்தது.