மாதவரத்தில் இரு சக்கர வாகனத்தை திருடிய சிறுவன் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர் …..!!!!
சென்னை மாவட்டம் ,மாதவரத்தை அடுத்துள்ள மாத்தூரரில் உள்ள எம்.எம்.டி.ஏ. 16-வது தெருவை சேந்தவரான சீனிவாசன்,கடந்த 16-ம் தேதி இரவு தனது இரு சக்கர வாகனத்தை தன் வீட்டின் முன் நிறுத்தினார். மறு நாள் காலையில் தனது வாகனம் திருடப்பட்டிருப்பதை அறிந்து மாதவரம் பால்பண்ணை போலீஸில் புகார் அளித்தார். புகார் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்
இதைத்தொடர்ந்து போலீசார் வீட்டின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.அந்த பதிவில் ஒரு சிறுவன் உள்பட நான்கு பேர் வாகனத்தை திருடிச்செல்வது தெரிய வந்தது.பின்னர் விசாரித்ததில் பெரிய மாத்தூரைச் சேர்ந்த நந்தகுமார், சென்னையைச் சேர்ந்த சாய்ராம், பூமாஆதித்யன்(எ)தம்பா மற்றும் சிறுவன் உள்பட என மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.