Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எந்த கஷ்டமும் இல்லாமல் மலம் வெளியேற…? இந்த 7 விஷயங்களை பாலோ பண்ணுங்க… ரொம்ப நல்லது..!!

இன்று நம்மில் பலர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று மலச்சிக்கல். மலச்சிக்கல் பிரச்சனை ஆரோக்கியமற்ற குடல் இயக்கங்களால் ஏற்படுகின்றது. அதற்கான தீர்வினை குறித்து தொகுபில் நாம் பார்ப்போம்.

மலச்சிக்கல் பிரச்சினை வரும்போது நாம் அதனை நண்பர்களிடமோ அல்லது மருத்துவர்களிடம்  சொல்லுவதற்கு கூட தயங்குவோம். வெளியில் அல்லது அலுவலகத்தில் செல்லும் போது மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றுகிறதா ?அப்படி என்றால் அதிலிருந்து தடுக்கக்கூடிய ஏழு படிகளை இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

முதலில் நாம் உடம்புக்குத் தேவையான அளவு உணவை எடுத்துக்கொள்வது நாம் மலச்சிக்கலில் இருந்து விடுபட மிகவும் உதவியாக இருக்கும். உணவை உட்கொள்ளும்போது பெருங்குடல் வழியாக இயக்கங்கள் ஊக்குவிக்கப்பட்டு குடல் சுருங்கி விரிவதால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும். மலச்சிக்கலில் இருந்து விடுபட முதலில் போதுமான அளவு உணவை உட் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை விட என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதுதான் முதலில் முக்கியம்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளும் போது மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் குணமாகும். ஒரு நாளைக்கு 25 கிராம் முதல் 28 கிராம் அளவில் நார்ச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான கொழுப்புகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். நார்ச்சத்தை போலவே கொழுப்பு மொத்தமாக நம் உடலில் சேருகிறது. நம் உடலில் விட்டமின் ஏ உறுப்புகள் துணைபுரிகின்றன. இதனால் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து உங்களை பாதுகாக்கின்றது.

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமான ஒன்று. நம் உடலில் தண்ணீர் நிரம்பிய உணவுகளை எடுத்துக் கொண்டால் அது மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும். வெயில் காலம் ஆரம்பித்து விட்டதால் இனி நீங்கள் பழங்களை அதிக அளவில் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். புளிப்பான உணவுகளை நீங்கள் உட்கொள்வது மிகவும் நல்லது. அதாவது அண்ணாச்சி பழம் போன்ற உணவுகளை நாம் உட்கொள்ளும் போது நார்ச்சத்து அதிக அளவில் இருக்கும். இதனால் உடல் சீரான இயக்கத்திற்கு உதவியாக இருக்கும்.

உங்களுக்கு மலம் கழிக்க வேண்டும் என்று தோன்றினால் உடனடியாக கழிவறைக்கு சென்று விடுங்கள். மலத்தை அடக்குவது மூலநோய் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். நம் மலத்தை அடக்கும் போது உடலில் அழுத்தம் ஏற்பட்டு கஷ்டத்தை ஏற்படுத்தும். பெருங்குடலில் அதிகமாக சேரும் போது பாக்டீரியாக்களை அதிகரிக்கும். ஒருவேளை நீங்கள் அலுவலகத்தில் பணி நிமித்தமாக இருந்தால் உங்களது மேலதிகாரியிடம் அல்லது நண்பர்களிடம் கூறி விட்டு கழிவறைக்கு சென்று விடுங்கள். மலம் கழிக்கும் நடைமுறையை குறைந்தது ஐந்து நிமிடங்கள் அல்லது அதற்கான குறைவான நேரத்திற்கு மட்டுமே எடுக்க வேண்டும்.

Categories

Tech |