Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம்-புதுச்சேரியில் இன்று மாலையுடன் நிறைவு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது. அதுமட்டுமன்றி தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். ஒவ்வொரு கட்சியினரும் தமிழ் போட்டியிடும் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். தற்போது வரை 234 தொகுதிகளுக்கும் 4000-ற்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கலாகி உள்ளன.

இந்நிலையில் வேட்புமனுத் தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற வருகிற 22-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலையில் வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |