Categories
மாநில செய்திகள்

9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை?…. வெளியான புதிய தகவல்….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது பற்றி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் தஞ்சையில் 5 பள்ளிகளில் கொரோனா பாதிப்பு பரவியதால், மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். அதனால் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது தேர்தல் பயிற்சி வகுப்புகளும் தொடங்கியுள்ளதால் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்பட்டு உள்ளது. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இதுபற்றி நாளைக்குள் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |