சீனாவில் கர்ப்பமாக காத்திருந்த பெண் ஒருவருக்கு ஸ்கேன் செய்தபோது தெரியவந்த உண்மை பலரையும் வியக்க வைத்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த பிங்க்பிங்க் என்ற பெண் தனது கணுக்காலில் உள்ள எலும்பில் காயம் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவரிடம் சிகிச்சைக்காக சென்றிருந்தார். அப்போது அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது அவர்கள் இளம் வயதிலிருந்தே எலும்புகள் வளர வில்லை என்பது தெரியவந்தது. அதன்பிறகு அவருக்கு திருமணமாகி சில காலங்களாக குழந்தை இல்லாமல் கருத்தரிக்க முயற்சி செய்வதாகவும் மருத்துவர்களிடம் கூறியுள்ளார். மருத்துவர் அப்பெண்ணுக்கும் கணவருக்கும் இடையேயான இல்லறவாழ்க்கை தொடர்பான விஷயங்களை கேட்டபோது என்னால் ஒரு பெண் பெரும் சிற்றின்பத்தை பெற முடியவில்லை என்று கூறினார்.
மேலும் அதற்கு இந்த எலும்பு வளர்ச்சியின்மை தான் காரணமா என்று கேட்டுள்ளார்.அதனால் பிங்க்பிங்க்யை மருத்துவர்கள முழு பரிசோதனைக்க உட்படுத்தினார்கள். அந்தப் பரிசோதனையில் உயர் ரத்த அழுத்தம் மற்றும ரத்தத்தில் குறைந்த அளவு பொட்டாசியம் இருப்பது தெரியவந்தது. அதன்பிறகு பிங்க்பிங்க் ஸ்கேன் செய்து பார்த்தபோது மருத்துவர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் பிங்க்பிங்க் பிறப்பால் ஒரு ஆண் என்றும் அதனால் அவருக்கு கர்ப்பப்பை இல்லை என்றும் ஆகையால் தான் பல முயற்சி செய்தும் கரு தரிக்க முடியவில்லை என்றும் தெரிந்தது.
பிங்க்பிங்கிற்கு ஆணுறுப்பிற்கு பதிலாக பெண் உறுப்பு இருப்பதும் மருத்துவர்களுக்கு தெரியவந்தது . இதனை அறிந்த பிங்க்பிங்க் அதிர்ச்சி அடைந்தார். அப்பொழுதுதான் பிங்க்பிங்க்யை தன் தாய் சிறுவயதில் தன்னை மருத்துவரிடம் அழைத்துச் சென்ற போது மற்ற குழந்தைகளை விட எனது வளர்ச்சியில் மிக குறைவாக இருப்பதாகவும் காலப்போக்கில் அது சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிங்க்பிங்க்கு மருத்துவர்கள் மரபணு பரிசோதனை செய்தபோது அதில் ஆண்களுக்கு உரிய காரியோ டைப் 46 எக்ஸ் ஒய் இருப்பது தெரியவந்தது. இது பரிசோதனை செய்த மருத்துவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.