Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக பெட்டி வாங்கியே பழக்கப்பட்ட கட்சி…. மக்களிடம் உங்க விந்தை எடுபடாது… முதல்வர் ஈபிஎஸ் கடும் விமர்சனம்…!!!

தமிழகத்தில் திமுக பெட்டி வாங்கியே பழக்கப்பட்ட கட்சி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.

அதுமட்டுமன்றி தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் திமுக பெட்டி வாங்கி பழக்கப்பட்ட கட்சி,அதனால்தான் ஸ்டாலின் தற்போது மனுக்களை வாங்குவதற்கு பெட்டிகளை எடுத்துச் செல்கிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஏற்கனவே 2019 ஆம் ஆண்டில் வாங்கிய மனுக்களை ஸ்டாலின் என்ன செய்தார். அதிமுக ஆட்சியில் மக்களிடம் மனுக்களை வாங்கி ஏமாற்றியவர் ஸ்டாலின்.

தற்போது அந்த விந்தையை  மக்களிடம் காட்டுகிறார். ஆனால் இந்த முறை அது எடுபடாது. விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய அனைத்து கடன்களையும் அதிமுக அரசுதள்ளுபடி செய்து அதற்கான சான்றிதழ்களையும் வழங்கி விட்டது. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் விவசாய கடன்களை ரத்து செய்வதாக ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார் என்று முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

Categories

Tech |