Categories
உலக செய்திகள்

” கொரோனா வைரஸின் மூன்றாம் அலை “… தளர்த்தப்பட்ட ஊரடங்கு… புது டெக்னிக்கை கையிலெடுத்த ஜெர்மன் நகரம்…!!

கொரோனா வைரஸின் மூன்றாம் அலை பரவத் தொடங்கிய நிலையில் தென் மேற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு நகரத்தில் புதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் பரவும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவத் தொடங்கி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. குறிப்பிட்ட சில நாடுகளில் கொரானாவின் இரண்டாவது அலையால் அதிக அளவு மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். கொரோனாவின் மூன்றாவது அலை சில நாடுகளில் பரவ தொடங்கியுள்ள நிலையில் தென் மேற்கு ஜெர்மனியில் உள்ள Tubingen என்ற நகரத்தில் கடந்த செவ்வாய் கிழமையில் இருந்து கடைகள், ஹோட்டல் என அனைத்துமே வழக்கம் போல் இயங்கிக் கொண்டு இருக்கின்றது.

அதற்கான காரணம் என்ன தெரியுமா? கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொது முடக்கத்தை அமல்படுத்துவதற்கு பதிலாக மக்களுக்கு விரைவில் கொரோனா பரிசோதனையை செய்துவிட்டு யாருக்கெல்லாம் கொரோனா இல்லையோ அவர்கள் எல்லாம் இயல்பு வாழ்க்கையில் என்னென்ன செய்வார்களோ அதை எல்லாம் செய்வதற்காக ஒரு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

அதன்படி மூன்று வாரங்களுக்குள்  பெருமளவு மக்களுக்கு அதிவேக பரிசோதனை கிட் மூலம்  கொரோனா பரிசோதனை செய்து மக்கள் அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இந்த திட்டம் பலனளிக்குமா?  இல்லையா? என்று அறிவியலாளர்கள் ஆய்வு செய்ய இருக்கின்றனர் . இந்தத் திட்டம் ஒருவேளை,  பலனளிக்கவில்லை என்றால் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்படும். நடப்பாண்டில் ஏப்ரல் 4ஆம் தேதியில் இருந்து இந்த திட்டம் செயல்படுத்த இருப்பதாக Tubingen நகர அதிகாரிகளும் அறிவியலாளர்களும் ஆலோசித்து முடிவு செய்துள்ளனர்.

Categories

Tech |