நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைமயிலான கூட்டணி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி அம்மாவுடைய நல்லாசியுடன், தொகுதி மக்களுடைய பேராதரவு மற்றும் அவர்கள் 1991ஆம் ஆண்டிலிருந்து என் மீதும், கழகத்தின் மீதும், தொகுதியில் காட்டி வருகின்ற மாறாத அன்பும், ஒரு பாசமும், தொகுதி மக்களுடைய நல்லா ஆசியுடன் ஏழாவது முறையாக ராயபுரம் தொகுதியிலே களம் இறங்குகின்றேன்.
ஏதாவது முறை களம் இருக்கின்ற நிலையில் ராயபுரம் தொகுதியை பொறுத்தவரை கடந்த ஐந்து முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்று, ஆறாவது முறையாக மக்களுடைய பேர் ஆதரவோடும்…. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொண்டர்களுடைய நல்லா ஆதரவோடும்…. கூட்டணி கட்சியினரின் நல் ஆதரவோடு…. அதுமட்டுமில்லாமல் ஒட்டுமொத்தமாக எங்களுடைய தலைவர்களாக இருக்கின்ற எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அவர்களின் நல்லாசியுடன் தொகுதியில் கடந்த 1991ஆம் ஆண்டு வரலாற்றை காட்டிலும் இதுவரை இல்லாத அளவிற்கு ராயபுரம் தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்திலே கழகம் வெற்றி பெறும்.
மீண்டும் மக்களுக்கு பணியாற்றுகின்ற வாய்ப்பினை ராயர்புரம் தொகுதி மக்கள் நிச்சயம் தருவார்கள். ராயபுரம் தொகுதியை பொறுத்தவரை அடிப்படை கட்டப்பை வசதிகளில் இருந்து… குடிசைகள் முழுமையாக… எந்த குடிசையும் இல்லாத அளவிற்கு… ஒழிக்கப்பட்டு…. அடுக்குமாடி வீடுகளெல்லாம் கட்டப்பட்டது. சமுதாய கூடம் வந்து, மருத்துவமனைக்கு உண்டான வசதிகள் செய்து கொடுத்துள்ளோம். போக்குவரத்து வசதியான மெட்ரோ ரயில்,ரூ.16,000கோடி ரூபாய் செலவில் வடசென்னை மக்கள் பயன்படுகின்ற வகையில் ஐந்து ஆண்டு காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிறப்பான திட்டம், ஒருங்கிணைந்த திட்டம் கொண்டு வந்துள்ளோம்.