இந்த பகுதி மக்களுடைய விவசாயிகள் செழிப்பு அடைவதற்காக எல்லா கம்மாய்களையும் தூர்வாரியாச்சு. ராஜபாளையம் பகுதியில் தூர் வாராத கம்மாயை சொல்லுங்கள் பார்க்கலாம். எல்லா கம்மாயையும் லிஸ்ட் எடுத்து தூர்வாரினோம். அதனால்தான் இன்றைக்கு எல்லா கம்மாயும் நிறைந்திருக்கிறது. எங்கு போனாலும் எல்லா கம்மாய்யும் நிறைந்திருக்கிறது. ராஜபாளையம் பகுதியில் உள்ள கம்மாய் முழுவதும் நிறைந்திருக்கிறது.
சாஸ்தா அணை கட்டு நிரம்பி வழிகிறது. அங்கு இருக்கின்ற டேம் நிரம்பி வழிகிறது. இயற்கையின் கொடை தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி ஆட்சியில் பொங்கி வழிகின்றன காரணத்தால், மேட்டூர் அணை 100 அடி அப்படியே நிற்கிறது. கடைமடை வரை தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. அந்த தண்ணீயை தான் இன்றைக்கு குண்டாறு வரை திருப்ப போகிறார் முதலமைச்சர் எடப்பாடி.
நான் துணை சேர்மனாக பதினைந்து ஆண்டு காலம் உள்ளாட்சியில் பணியாற்றிய அனுபவம், 10 ஆண்டுகள் அமைச்சராக பணியாற்றிய அனுபவம், அதிகாரிகளோடு நான் பழகுகின்ற பாங்கு, பக்குவம் இவைகளெல்லாம் கைக்கொடுக்கும். இந்த திட்டங்களையெல்லாம் தீட்டி நிறைவேற்றுவதற்கு இந்த அனுபவம் எனக்கு பாடமாக அனுபவமாக பக்குவமாக இருக்கும் என்று சொல்லி…. நிச்சயமாக ராஜபாளையம் தொகுதியை தலைசிறந்த தொகுதியாக உருவாக்கி காட்டுவேன், மாற்றி காட்டுவேன் என அமைச்சர் தெரிவித்தார்.