நாடு முழுவதும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் திணிக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, கடந்த 2018-2019ஆம் ஆண்டு நிலவரப்படி நாடு முழுவதும் 10,83,747 அரசு பள்ளிகளில் 10,41,327 பள்ளிகளில் குடிநீர் வசதியும், 10,68,726பள்ளிகளில் கழிப்பறை வசதியும் உள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளித்துள்ளார். இதன் மூலம் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் குடிநீர் வசதிகளும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் கழிப்பறை வசதியும் இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.