Categories
தேசிய செய்திகள்

பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடி… காதலியின் துப்பட்டாவை இழுத்து வம்பிழுத்த மர்மநபர்கள்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் மறைவாக நின்று பேசிக்கொண்டு இருந்த காதல் ஜோடியை தாக்கிய மர்ம நபர்களை குறித்த வீடியோ வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் ஒரு பெண் தன் காதலனுடன் தனியாக நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் காதலியின் துப்பட்டாவை பிடித்து இழுத்து தவறாக நடந்துகொண்டனர். பின்னர் காதலனையும் அடித்து உதைத்துள்ளனர். இதையடுத்து காதலன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் காதலியை அவர்கள் துன்புறுத்தினர்.

இந்த வீடியோ ஆனது தற்போது இணையத்தில் வெளியாகியது. அந்த பெண் யார் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து காவல்துறையினர் இந்த வீடியோ சம்பந்தமாக விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் படுவார்கள் என்றும் கூறியுள்ளனர்.

Categories

Tech |