Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் நீக்கப்படும்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நாட்டில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளில் ஒரு வருடத்தில் நீக்கப்படும் என புதிய அறிவிப்பை அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்  2வது கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர்  கடந்த  மார்ச் 8 தேதி தொடங்கியது.அதில்  பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. குன் வார் டேனிஷ் அலி ஒரு  கேள்வி  எழுப்பினர். அவர்  கட்முக்தேஸ்வர் அருகே நகராட்சி எல்லையில் ஒரு சுங்க சாவடி அமைத்து  இருப்பது பற்றி கேள்வி   கேட்டார்.

அதற்கு பதிலளித்த நிதின் கட்கரி “முந்தைய அரசும்” நகரத்திற்கு அருகில் சுங்கச்சாவடிகள் அமைத்துள்ளன. இது சட்ட விரோதமான செயல் என்றும் இதுபோன்ற சுங்கச்சாவடிகளை அகற்ற முடிவு எடுப்போம் என்று மக்களவையில் உறுதிமொழி வைக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் ஜிபிஎஸ் முறையில் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும். இதனால் சாலையின் நுழைவுப் பகுதி மற்றும் வெளியேறும் இடங்களில் கேமராக்கள் பொருத்தப்படும்.மேலும்  நீங்கள் குறிப்பிட்டு சாலையில் நுழையும் போதும் மற்றும் வெளியேறு இடத்தில்  உள்ள கேமராக்கள் உங்கள் படத்தை பதிவுசெய்யும் அதனடிப்படையில் உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் .

அதன்பிறகு யாரும் சுங்கச்சாவடிகளில் வாகனத்தை  நிறுத்த அவசியமில்லை.  அதுமட்டுமல்லாமல் தற்போது வரும் புதிய வாகனங்களில் ஜிபிஎஸ் அமைப்புஉள்ளது .  இந்த அமைப்பை பழைய வாகனங்களில்  இலவசமாக பொறுத்தஏற்பாடு செய்யப்பட் டுவருகிறது. மேலும் பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்ட  பின்பு மோசடிகள் முற்றிலும் ஒழிந்திருப்பதாகவும், தற்போது நாட்டில் 93 சதவீத வாகனங்கள் பாஸ்ட் டேக் முறையை பின்பற்றி சுங்க சாவடிகளில் கட்டணத்தை செலுத்தி வருகின்றன எனவும் கூறினார் .ஆனால் தற்போது 7 சதவீதம் பேர் பாஸ்டேக் எடுக்காமல் 2மடங்கு கட்டணத்தை சுங்கச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |