Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகப்பட்டினம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மாவட்டத்தின் தலைநகரை தன்னகத்தே கொண்டது நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி. இஸ்லாமியர்களின் மிக முக்கிய புனித தலமான நாகூர் இங்கு அமைந்துள்ளது. விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலை பிரதானமாக இங்கு உள்ளவர்கள் நம்பியுள்ளனர். சோழர்கள் காலத்திலேயே புகழ் துறைமுக நகரமாக விளங்கியது நாகப்பட்டினம். நாகப்பட்டினம் தொகுதியில் திமுக மற்றும் காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளனர். அதிமுக 4 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் 1 முறையும், அதிக அளவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 முறையும் வெற்றி பெற்றுள்ளது. தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏவாக அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற தமிமுன் அன்சாரி உள்ளார். நாகை தொகுதியில் மொத்தம் 1,97,316 வாக்காளர்கள் உள்ளனர். நாகையில் பசுமை துறைமுகம் கொண்டு வர வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. நீண்ட கால கோரிக்கைக்கள் நிறைவேற்ற பட வில்லை என்றும், கொரோனா ஊரடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

படித்த இளைஞர்கள் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு செல்வதால் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்றும் சுற்றுலா தலமான நாகூரை தரம் உயர்த்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மாவட்டத்தின் தலைநகராக இருந்தாலும் நாகையில் சாலை வசதிகள் போதுமான அளவிற்கு இல்லை என்று கூறும் மக்கள் சாலைகளை சீரமைப்பதுடன், புதிய பேருந்து நிலையம் ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை  நிறைவேற்றியதாக கூறியிருக்கும் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி அரசுக்கு எதிரான நிலைப்பட்டால் பல திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என கூறியுள்ளார். நாகூர் வெட்டாற்று கரையில் உள்ள குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர். நீண்ட கால கோரிக்கைகளும், நிறைவேற்றப்படாத  வாக்குறுதிகளே அதிகம் என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |