நடிகை மாளவிகா மோகனன் மகேஷ்பாபுவுடன் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதை தொடர்ந்து இவர் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். மேலும் இவர் தற்போது தனுஷ்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நபர் ஒருவர் சமூக வளைதளத்தில் மகேஷ் பாபு மற்றும் மாளவிகாவின் போட்டோவை இணைத்து இந்த காம்பினேஷனை யாரெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பி போஸ்ட் செய்துள்ளார். இந்த போஸ்டருக்கு முதல் ஆளாக மாளவிகா பதிலளித்துள்ளார்.
அதில் அவர் “me” என்று கமென்ட் செய்துள்ளார். இதிலிருந்து அவர் மகேஷ் பாபுவுடன் நடிக்க ஆசைப்படுகிறார் என்று தெரியவந்துள்ளது. மாளவிகாவின் இந்த பதிலுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.