உத்திர திருநாளுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் அவசியம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வந்தனர். இதையடுத்து தற்போது மீண்டும் கொரோனா வேகமெடுக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் உத்தரத்திருநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் 28ம் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும். இதையடுத்து உத்திர திருநாளுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் அவசியம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.