சப் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு அருகே போக்குவரத்து அதிகாரி ஒருவர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளார். அப்போது அவ்வழியாக மணல் ஏற்றி வந்த ஒரு லாரியை அதிகாரி நிறுத்தி அந்த லாரியை ஓட்டி வந்த ஓட்டுநருடன் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு லாரியின் ஓட்டுநர் மணல் ஏற்றி வந்ததற்கு உரிய சான்று உள்ளது என கூறிய பிறகு போக்குவரத்து அதிகாரி 500 ரூபாய் லஞ்சம் கொடுத்து விட்டு செல் என கூறியுள்ளார்.
இவை அனைத்தையும் செல்போனில் வீடியோவாக படம் பிடித்த ஒருவர் சமூக வலைதளங்களில் அதனை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து உயர் அதிகாரிகள் கூறும்போது, வீடியோவில் லஞ்சம் வாங்குவது போல் இருக்கும் போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.