நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், இதுவரைக்கும் 16 ஆண்டு காலம் நான் தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டு இருந்தேன். முதல் முறையாக வேட்பாளராக இந்த முறை விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுவதனால்… இந்த முறை நான் 60 தொகுதிகளுக்கும் பிரச்சாரத்திற்கு செல்ல இயலாது. ஏனென்றால் காலம் குறைவாக இருக்கிறது. 15 நாட்கள்தான் இருக்கிறது.
அதனால் எல்.கே சுதீஷ் அவர்களும், விஜய பிரபாகரன் அவர்களும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் கேப்டன் அவர்களும் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள். எனவே நான் என்னுடைய முழு கவனத்தையும் விருத்தாசலம் தொகுதியில் இந்த முறை செலுத்த இருக்கின்றேன். கேப்டனை பொறுத்தவரைக்கும் 2006இல் கொடுத்த அத்தனை வாக்குறுதிகளையும் விருத்தாச்சலம் தொகுதியில் நிறைவேற்றியிருக்கிறார்.
அது இந்த மக்களுக்கு தெரியும். ஏதாவது விடுபட்டு இருந்தால், அந்த குறைகளையும் இந்த முறை நாங்கள் நிச்சயமாக சரி செய்வோம். லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி அதான் எப்போதும் கேட்டேன் சொல்லுவது. அதற்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம்.
கடன் வந்து அதிகமாகிக்கொண்டே போகிறது. அதனால் இலவச பொருட்களை கொடுப்பதற்கு பதில், வேலை வாய்ப்பு, மக்களுக்கு தேவையான நல்ல இருப்பிடம், கல்வி மருத்துவத்தை இலவசமாக ஆகலாம். அதைவிட்டு மற்ற பொருட்களை கொடுத்து மக்களை ஏமாற்றுவதை விட்டு தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக நல்ல திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம்.