Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே! 45 வயது மேல் உள்ளவர்களுக்கு கட்டாயம்…. சென்னை மாநகராட்சி அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் ஒரு சில மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில இடங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் எப்படி கொரோனா வேகமாக பரவியதோ அதுபோல தற்போதும் பரவுவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குறிப்பக கோவை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, திருப்பூர், மாவட்டங்களில் அதிகம் பரவுகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் அதிகமான இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. மேலும் 6000 தடுப்பு மருந்துள் போடுவதற்கு தயாராக உள்ளது. சென்னையில் உள்ள அனைத்து குடும்பத்தில் உள்ள 45 வயதுக்கும் மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |