தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பதிலாக சீட் தேர்வு நடத்தப்படும் என கமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.
அதுமட்டுமன்றி தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் கடன் இல்லாத தமிழகம் உருவாகும். நீட் தேர்வுக்கு பதிலாக சீட் தேர்வு நடத்தப்படும் என்று கோவையில் கமல்ஹாசன் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் தமிழகத்தின் வளர்ச்சியை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்துவோம். அனைவருக்கும் சுத்தமான குடிநீர் நீலப் புரட்சி. கிராம சுய சார்பு திட்டம்.
ஆழ்கடல் மீன்பிடிப்பு பொருளாதார வளர்ச்சித் திட்டம். அரசு பள்ளி கல்வி உலக தரத்தில் மேம்பாடு. விவசாயம் உற்பத்தி முதல் விலை நிர்ணய உரிமை, ஏற்றுமதி வரை உலக சந்தையின் மயமாக்கல். படிப்படியாக மதுவிலக்கு. தனிநபர் வருமானத்தை 7 முதல் 10 லட்சமாக உயர்த் தும் என கமல் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.