புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகள் யாரும் கல்லூரிக்கு வரவேண்டாம் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அனைத்து பள்ளிகளிலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இருந்தாலும் சில மாநிலங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. அதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மிகவும் அச்சப்படுகிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் குறைந்த கொண்டுவந்த கொரோனா பாதிப்பு, பல மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுமட்டுமன்றி பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக பள்ளி மாணவ, ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் 2 பேராசிரியர்களுக்கு கோரொனா உறுதியாகியுள்ளது. பேராசிரியர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, மாணவிகள் யாரும் கல்லூரிக்கு வரவேண்டாம் என்றும் செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலமே நடத்தப்படும் எனவும் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.