தமிழகத்தில் தேர்தல் களம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் மாறி மாறி வேட்பாளர்கள் மீதும் குற்றம் சுமத்தி வாக்குகளை சேகரித்து வருகின்றனர். தேர்தலுக்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் மிகவும் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையே சர்ச்சையாக பேசுவதில் தொடர்ந்து சிக்கிக்கொள்ளும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தபோது அமமுக பற்றி கேள்வி கேட்டால் அடிப்பேன் என்று சர்ச்சையாக பேசி கோபத்தில் பொங்கினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. தேர்தல் நேரத்தில் அமைச்சர் கோவப்பட்டு பேசியது அங்கிருந்த தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.