Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி…. உச்சக்கட்ட அதிர்ச்சி செய்தி….!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்களில் 2 லட்சம் பேர் 2வது டோஸ் செலுத்த வரவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக நாடுகள் அனைத்திற்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

தற்போது அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டு கொண்டவர்களில் ஒரு லட்சம் பேர் இரண்டாவது டோஸ் செலுத்த வரவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 4 வாரத்திற்கு முன்பு 2.46 லட்சம் பேர் முதலாவது கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டனர்.இதில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவில்லை.

Categories

Tech |