Categories
தேசிய செய்திகள்

“ஒடிசாவில் நிலக்கரி சுரங்கத்தில் நிலச்சரிவு” 4 தொழிலாளி பலி ….!!

ஒடிசாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்திருக்க கூடும் என்று  அஞ்சப்படுகிறது.

ஒடிசா மாநிலத்தின் பாரத்பூர்  பகுதியில் மகாநதி நிலக்கரி சுரங்கம் உள்ளது. இதில் தினம்தோறும் சுமார்  20,000 டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகின்றது. வழக்கம் போல நேற்று நள்ளிரவில் இந்த சுரங்கத்தில் 15 ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டு இருந்தனர். அப்போது தீடிரென சுரங்கத்தின் ஒரு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பணியாற்றிய ஊழியர்கள் நிலச்சரிவில் சிக்கினர்.

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழப்பு

இந்நிலையில் இதுகுறித்து  உயரதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட தகவலையடுத்து ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களுடன் நிலச்சரிவில் சிக்கிய தொழிலாளிகளை மீட்கும் பணி நடைபெற்றது. இதில் 9 தொழிலாளர்கள்  படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில்,  4 பேர்  நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |