Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கார், மோட்டார்சைக்கிள் தருகிறோம்…. மக்களைக் கவர்ந்த அறிவிப்பு…. 44 லட்சம் மோசடி இருவர் கைது….!!

சேலம் மாவட்டத்தில் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்கும் நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் ரூபாய் 44 லட்சம் மோசடி செய்த இருவரை காவலர்கள் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் அழகாப்புரத்தில் வீட்டிற்குத் தேவையான சாமான்கள் வாங்கும் நிறுவனம் ஒன்று இருந்தது. இந்நிறுவனத்திலிருந்து அனைவரையும் ஈர்க்கும் வகையில் அறிவிப்பு ஒன்று வெளியாகியது . அதாவது ரூபாய் அறுபதாயிரம் கட்டி சாமான்கள் வாங்கினாள் 6 லட்சம் மதிப்புடைய கார் வழங்கப்படும் என்றும் ரூபாய் பத்தாயிரம் கட்டி சாமான்கள் வாங்கினாள் மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என்றும் குறைந்த அளவு பணம் கட்டினால் தங்கம் , வெள்ளி போன்ற பொருள்கள் வழங்கப்படும் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்கள் .

இவர்களின் இவ்வறிவிப்பினை நம்பி நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட மக்கள் இலட்சக்கணக்கான ரூபாய்களை கட்டியுள்ளார்கள். ஆனால் அறிவிப்பில் இருந்தபடி எந்தவிதமான பொருட்களும் கொடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்கள். ஆனால் நிறுவனத்தார்கள் பணத்தை திருப்பித் தர இயலாது என்று கூறியதையடுத்து மக்கள் அனைவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் . அப்புகாரை ஏற்ற காவலர்கள் நிறுவனத்தார்கள் இருவரை கைது செய்து விசாரணை செய்ததில் இதுவரை மக்களிடமிருந்து சுமார் 44 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது.

Categories

Tech |