இவரை விட எளிமையான நடிகர் இருக்க முடியாது என்று அஜித்தை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடியவுள்ளது. இதற்கிடையில் ரசிகர்கள் வலிமை படத்திற்கான அப்டேட்டை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் படக்குழுவினர் படத்திற்கான அப்டேட்டை இன்னும் வெளியிடாமல் உள்ளனர். இதற்கிடையில் அஜித் ஒரு முறை கமிஷனர் அலுவலகத்திற்கு கால் டாக்சியில் மூலம் சென்றிருந்தார். அச்சம்பவம் அப்போது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில் அவர் முக கவசம் அணிந்த படி ஒரு ஆட்டோவில் சென்றுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் இவரை விட எளிமையான நடிகர் இருக்க முடியாது என்று பாராட்டி வருகின்றனர்.மேலும் அஜித் ஆட்டோவில் செல்லும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/TeamThalaFC/status/1372734444017053696