Categories
உலக செய்திகள்

6 வயது சிறுமியை கொன்ற சிறுவன்.. பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்காவில் 6 வயது சிறுமியை 14 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள இண்டியானா பகுதியில் வசிக்கும் Grace Ross என்ற 6 வயதுடைய சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை அன்று காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட ஆரம்பித்த சுமார் இரண்டு மணி நேரத்தில் மரங்கள் அடர்ந்திருக்கும் ஒரு பகுதியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதிர்ச்சியூட்டும் இந்த வழக்கில் 14 வயதே ஆன ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குற்றவாளி சிறுவனாக இருப்பதால் வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனையில் கழுத்தை நெறித்து கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி Derek Dieter கூறியுள்ளதாவது, இந்த குற்றவாளி சிறுவன் அல்லாமல் அதிக வயதுடையவராக இருந்தால் அவர் மீது சட்டம் கடுமையாக பாய்ந்திருக்கும் என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அந்த சிறுவன் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும் எதற்காக சிறுவன் Grace ஐ கொலை செய்தார்? என்பது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Categories

Tech |