இந்தியா மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதற்கு தற்காலிக தடை விதித்துள்ளதாக எஸ் ஐ ஐ நிறுவன தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்துவதற்காக பொதுமுடக்கம் மற்றும் தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்திற்கு இந்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. இதனால் பிரிட்டனில் தடுப்பூசி போடும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அஸ்டரோ ஜெனேகா தடுப்பூசிகளை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆதார் பொண்ணவல்ல கூறியதாவது “இந்தியா அரசு தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடைவிதித்துள்ளதால் பிரிட்டனுக்கு தடுப்பூசிகளை அனுப்புவது குறித்து இந்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும்.
இதற்கு முன்பு பிரிட்டனுக்கு முதற்கட்டமாக 5 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 5 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வழங்குவதற்காக இந்தியா அனுமதி அளித்தால் மட்டுமே அதனை எஸ்ஐஐ நிறுவனம் வழங்கும்” என்று அவர் கூறியுள்ளார்.