Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

1 1/2 வருடம் கழித்து வந்த கணவரின் ஆசை…. மனைவி கொடுத்த திடீர் ஷாக்…. கோவையில் பரபரப்பு….!!

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெங்கடாபுரம் பகுதியில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒடிசா மாநிலத்தில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சசிகலாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பிரவீன்குமார் ஒடிசாவில் இருந்து  தனது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது வெளியூரில் நடைபெறும் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு செல்ல விரும்புவதாக தனது மனைவியிடம் கூறியுள்ளார்.

அதற்கு சசிகலாதேவி 1 1/2 வருடம் கழித்து வந்த நிலையில் தன்னுடன் சிறிது நேரம் செலவிட வேண்டும் என்று கூறியபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சசிகலாதேவி தனது உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சசிகலாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் சசிகலாதேவி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அன்னூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |