விபத்தை ஏற்படுத்தும் வண்ணம் போக்குவரத்துக்கு இடையூறாக கம்பித் தடுப்புகள் சாலை வைக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பாலக்காடு ரோடு வடுகபாளையம் பிரிவில் 45 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதோடு தண்டவாள பகுதியில் ரயில்வே துறை மூலம் 5 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டப்படுகிறது. இந்த பணிக்காக 18 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 850 மீட்டர் தூரத்திற்கு நான்கு வழி சாலை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அதோடு ஐந்தரை மீட்டர் அகலத்தில் சர்வீஸ் ரோடு அமைக்கப்படுவதால் பாலம் கட்டுமான கான்கிரீட் தடுப்புகள் பாலக்காடு ரோட்டின் ஓரத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் அந்த காங்கிரீட் தடுப்புகள் மீது ஒளிரும் ஸ்டிக்கர் ஓடாததால் இரவு நேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு கம்பித் தடுப்புகள் இருப்பது தெரியாது எனவும், அதன் மீது மோதி விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே விபத்துகளை தடுக்கும் பொருட்டு அந்த தடுப்புகள் மீது ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் எனவும், இல்லை என்றால் அதனை வேறு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மாற்றி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.