Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை ..!!பிரிட்டனில் கொரோனா தொற்று 116 பகுதிகளில் அதிகரிப்பு ..!!பீதியில் மக்கள் .!!

பிரிட்டனில் கொரோனா தொற்று 116 பகுதிகளில் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது .

கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை பிரிட்டனில் ஒரே மாதத்தில் 80 சதவீதம் சரிவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது .பிரிட்டனில் உள்ள மற்ற ஒன்பது பகுதிகளில் தொற்று அளவு மாறாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கொரோனா தொற்றால் நேற்று மட்டும் 141 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,758 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தொற்று எண்ணிக்கை நான்கு வாரங்களுக்கு முன் 12,718 ஆக இருந்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,74,579 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது .மேலும் கொரோனா தொற்றால் இதுவரை 1,25,831 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் தான் இங்கிலாந்தில் 116 பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக  ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது .

மேலும் இதற்கிடையே பிரிட்டனில் 25.2 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டதாகவும் 1.7 மில்லியன் மக்களுக்கு இரண்டாவது டோஸ் மருந்து வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |