Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பூம்புகார் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள், பிரச்சனைகள் என்ன ?

ஆழிப்பேரலையால் மூழ்கடிக்கப்பட்ட ஆதி தமிழர் நாகரிகதின்  அடையாளச்சின்னம் பூம்புகார். சிலப்பதிகார காட்சிகளை கண் முன்னே விளக்கும் பூம்புகார் கலைக்கூடம் 1306 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மாசிலா நாதர் ஆலயம் ஆகியவை புகழ்பெற்றவை ஆகும். இந்தியாவில் முதல் அச்சுக்கூடம், காகிதப்பட்டறை, பைபிளின் தமிழ் மொழி பெயர்ப்பு ஆகியவை நிகழ்ந்த தரங்கம்பாடி, கம்பராமாயணம் எழுதிய கம்பர் பிறந்த தேரிழந்தூர் ஆகியவை பூம்புகார் தொகுதியில் தான் உள்ளது.

விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவை முக்கிய தொழிலாக பார்க்கப்படுகிறது. பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் அதிமுக 6 முறையும், திமுக 3 முறையும் கைப்பற்றியுள்ளது. பாமக ஒரே ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ அதிமுகவின்எஸ். பவுன்ராஜ். பூம்புகார் தொகுதி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,75,582 ஆகும். சேதமடைந்துள்ள மீனவ கிராமங்களுக்கான சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும், பாழடைந்து கிடக்கும் பூம்புகார் கலைக்கூடத்தை புனரமைக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

சித்ரா பவுர்ணமி விழாவை மீண்டும் கொண்டாட வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரத்தை நீளமாக வேண்டும். அனல் மின் நிலையம் மற்றும் இறால் பண்ணைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. மூடப்பட்ட இந்திய உணவு கழகத்தில் அரிசி ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.

மயிலாடுதுறையில் இருந்து வரும் பாதாள சாக்கடை கழிவு நீரை சுத்திகரிக்க வேண்டும் என்பது மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. கம்பர் வாழ்ந்த கம்பர் மேடு பகுதியில் அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது மக்களின் விருப்பம். 10 ஆண்டுகளாக ஆளுங்கட்சி எம்எல்ஏ உள்ள தொகுதியாக இருந்த போதும் கோரிக்கைகள், வாக்குறுதிகள் நிறைவேற்றாமலேயே உள்ளனர்.

Categories

Tech |