தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகரான கிஷோர் தனது அடுத்த படத்தில் அப்பாவாக நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் வெளியான ஜடா, மெய், வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட படங்களில் நடித்து குணச்சித்திர நடிகர் எனப் பெயர் பெற்றவர் நடிகர் கிஷோர். இவர் தற்போது தேசியவிருது பெற்ற “குற்றம் கடிதல்” படத்தை இயக்கிய இயக்குனர் திரவ்வின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு “ராஜாவுக்கு ராஜா” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தந்தை மகள் பாசத்தை எடுத்துச் சொல்லும் இப்படத்திற்கு ஷங்கர் ரங்கராஜன் இசையமைக்க உள்ளார். மேலும் இப்படத்தில் சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியான், தனன்யா, ஜஷ்வந்த் மணிகண்டன், கண்ணன் பாரதி ஆகியோர் நடிக்க உள்ளனர்.