Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இனிமேல் எங்கையும் தப்பிக்க முடியாது…. தேடப்பட்ட குற்றவாளிகள் கைது…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பல்வேறு திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த நான்கு குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேற்கு மண்டல ஐ.ஜி தினகரன் பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் ஊஞ்சவேலம்பட்டி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் சேலையூரில் வெங்கடேஷ் என்பதும், மற்றொருவர் கோபிநாத் என்பதும் தெரியவந்துள்ளது.

இவர்கள் ஏற்கனவே திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருட்டு வழக்குகளில் சைதாப்பேட்டை பகுதியில் வசிக்கும் வினோத்குமார், சிவகுரு ஆகிய இருவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வெங்கடேஷ், வினோத், கோபிநாத் மற்றும் சிவகுரு ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |