Categories
உலக செய்திகள்

மக்களே அனைவரும் போட்டுக்கங்க… இல்லைன்னா ரொம்ப ஆபத்து… அமெரிக்க அதிபர் வேண்டுகோள்…!!!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென அந்நாட்டு அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் முதல்   உலகநாடுகளில் முழுவதிலும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது.அதனால் கொரோனாவுக்கு  எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது கொரோனா தடுப்பு ஊசிகள் உலகம் முழுவதிலும் பாேடப்பட்டு வருகின்றது .மேலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா  வைரஸின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில்  கொரோனாவால்  உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா  முதலிடத்தில் இருக்கிறது.அதனால் நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி  போட்டுக்கொள்ள வேண்டும் என்று  அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தி உள்ளார் . அதனால் மாடர்னா மற்றும் பைசர் பயோ என்டெக் என்ற நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறன. மேலும் அந்நாட்டில் 12, 44 ,81, 412. பேருக்கு கொரோனா தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி வரை  மொத்தம் 12, 14, 41, 497 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |