Categories
உலக செய்திகள்

ஈரானின் இரண்டாவது உளவு விமானத்தை சுட்டுவீழ்த்தியது அமெரிக்கா …!!

போர் கப்பலை இரண்டாவது முறையாக அச்சுறுத்தும் வகையில் அணுகிய ஈரானின் ஆளில்லா உளவு விமானத்தின் மீது அமெரிக்காதாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது. 

கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதால் போர் ஏற்படும் அபாயம்  இருந்தது. இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் சென்ற யு.எஸ்.எஸ். பாக்சர் என்ற தங்கள் நாட்டு போர்க்கப்பலை அச்சுறுத்தக் கூடிய வகையில் அணுகிய ஈரான் நாட்டின் ஆளில்லா உளவு விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் டிரம்பின் இந்த கருத்தை ஈரான் மறுத்தது.

Image result for america iran

இந்நிலையில்  ஈரான் நாட்டின் இரண்டாவது உளவு விமானத்தின் மீதும் யு.எஸ்.எஸ். பாக்சர் கப்பலில் இருந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும், ஈரான் நாட்டின் உளவு விமானம் கடலில் விழுந்ததை பார்க்கவில்லை என்றும் அமெரிக்க நாட்டின் ராணுவம் தெரிவித்தது. மேலும் சர்வதேச கடல் பரப்பில்தங்கள் நாட்டுக் கப்பலை அச்சுறுத்தும் வகையில் அணுகியதால் தற்காப்புக்காக இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா  தெரிவித்துள்ளது.

Categories

Tech |