முதியோர் காப்பகத்தில் உயிரிழந்த முதியவரின் இறப்பில் மிக முக்கியமான உண்மை ஒன்று வெளிவந்துள்ளது.
பிரிட்டனில் உள்ள Lanarkshire என்ற பகுதியைச் சேர்ந்த 51 வயது பெண்மணி சோனியா பிரவுன் என்பவர் தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அப்பகுதியில் உள்ள முதியோர் காப்பகத்தில் அனுமதித்துள்ளார். இந்நிலையில் திடீரென்று அவரது கணவர் இறந்த நிலையில், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அறையின் சோபாவில் ஒரு துண்டு சீட்டு சோனியாவுக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்று பார்க்கும் பொழுது அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது.
சோனியாவின் கையில் கிடைத்தது துண்டுச்சீட்டு இல்லை அது DNACPR என்ற ஆவணம். DNACPR என்றால் Do Not Attempt CPR. எந்த நோயாளியின் படுக்கையில் இந்த ஆவணம் இருக்கிறதோ, திடீரென அவருக்கு இதய துடிப்பு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது CPR உயிர்காக்கும் சிகிச்சையை அளிக்க வேண்டாம் என்பதை கூறும் ஆவணம் தான் DNACPR .
ஒருவேளை மருத்துவர்கள் CPR சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால் நோயாளியின் உறவினர்கள் அல்லது குடும்பத்தினரின் ஒருவர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அந்த சிகிச்சை அளிக்க முடியும். இந்நிலையில் தன் கணவர் உயிரிழந்ததற்கு காரணம் CPR சிகிச்சை தான் என்றும், அந்த சிகிச்சை அளிக்காமல் இருந்திருந்தால் தன் கணவர் உயிருடன் இருந்திருப்பார் என்றும் சோனியா கூறியுள்ளார் .
இதுகுறித்து பொது நல ஆர்வம் கொண்ட ஆய்வு நிறுவனம் 2048 முதியோர் காப்பகங்களில் நடத்திய ஆய்வில் 508 பேருக்கு குடும்பத்தினரின் அனுமதியில்லாமல் CPR சிகிச்சை அளிக்கப்பட்டது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இந்த குற்றமானது ஐரோப்பிய கூட்டமைப்பின் மனித உரிமைகள் ஒப்பந்தத்தின் படி விதிமீறல் என்று தெரியவந்துள்ளது.