அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை மீண்டும் செலுத்தி கொள்ளப்போவதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வியாழக்கிழமை அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்துபவர்களுக்கு இரத்தம் உறைதல் போன்ற அபாயம் இருப்பதால் பல முன்னணி ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசி பயன்படுத்துவதை நிறுத்திவிட்டது. இதனால் ஐரோப்பிய மருத்துவ கட்டுப்பாட்டாளரான ஐரோப்பியன் மெடிக்கல் ஏஜென்சி தடுப்பூசியை குறித்து விசாரணை மேற்கொண்டது. விசாரணை மேற்கொண்டதில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி ‘பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது’ என்று தகவல் வெளியிட்டது.
இந்த அறிவிப்புக்குப் பிறகு இத்தாலி, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ,ஸ்பெயின் லித்துவேனியா,லாத்வியா ,ஸ்லோவேனியா, போர்ச்சுகல் மற்றும் பல்கேரியா ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசிகளை விரைவில் மக்களுக்கு செலுத்த தொடங்குவதாக கூறியுள்ளது.