துப்பாக்கியுடன் மெக்சிகோ சிட்டிக்கு வெளியே இருந்த பயங்கரவாதிகள் 13 மெக்சிகன் போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெக்ஸிகோ தலைநகரத்தில் 13 மெக்சிகன் போலீசாரை துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். அவற்றின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட 8 அதிகாரிகள் மாநில காவல்துறையினர். மேலும் 5 பேர் அரசு வக்கீல் அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டவர்கள்.
இதனை குறித்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான ரோட்ரிகோ மார்ட்டினெஸ் செலிஸ் கூறுகையில், இந்த தாக்குதல் மெக்சிகோவிற்க்கு ஏற்பட்ட அவமரியாதை என்றும் இதனை குறித்து தக்க பதிலளிக்கப்போவதாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த பயங்கரவாதிகளை ராணுவ படை மற்றும் தேசிய காவல் படைகள் தீவிரமாக தேடி வருவதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் எத்தனை குற்றவாளிகள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்பது பற்றி தெரியவில்லை என்றும் போதை பொருள் விற்பனையாளர்கள் யாராவது இதில் சம்பந்தப்பட்டிர்பார்களா என்பது பற்றி தெரியவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.