Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்…. திடீரென நடந்த சோகம்…. கதறும் பெற்றோர்…!!

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பாம்பு கடித்து  உயிரிழந்தது  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள கண்மாய் கரையோர தோப்பில் பிரபு என்பவர் அவரது மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வசித்து வருகிறார். இந்நிலையில் பிரபுவின் நான்கு வயதாகும் மூத்த மகன் நவீன் குமார் நேற்று மாலை வீட்டின் முன்பு இருந்த இடத்தில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு பாம்பு ஒன்று வந்துள்ள நிலையில் பாம்பினை யாரும் கவனிக்காததால் அங்கு விளையாடிக்கொண்டிருந்த பிரபுவின் மகன் நவீன் குமாரை கடித்தது .

இச்சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் நவீன்குமாரை ஆபத்தான சூழ்நிலையில் சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள். மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்து விட்டதாக கூறினார்கள் . இச்சம்பவம் குறித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |