கோவா அணியின் பயிற்சியாளரான ஜுவான் பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி விட்டது.
கோவாவில் நடைபெற்ற 7 வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் மும்பை அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த போட்டியில் எப்.சி கோவா அணி அரை இறுதியில் பெனால்டி ஷூட் அவுட்-டில் 5-6 என்ற கோல் கணக்கில் மும்பை இடம் தோல்வியுற்று நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில் கோவா அணியின் தலைமை பயிற்சியாளர் ஜுவான் பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி விட்டது. இதுகுறித்து கோவா அணி நிர்வாகம் கூறும் போது, பயிற்சியாளருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர் நல்ல உடல் நிலையுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து அந்த அணியின் வீரர்கள், உதவி பயிற்சியாளர்கள் போன்ற யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.