மதுரையில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர்கள் காரில் ஆயுதங்களுடன் வந்த இரு நபர்களை கைது செய்தனர்.
தற்போது தமிழகத்தில் 2021 காண சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்துள்ளார்கள் . இதனால் இவர்கள் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .
அந்த வகையில் மதுரை நரிமேடு அருகே காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது , அவ்வழியாக வந்த காரை மறித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் இருவரும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது . இதனைத்தொடர்ந்து காவலர்கள் காரை சோதனை செய்ததில் அரிவாள் , கத்தி , திமுக கட்சி கொடி போன்றவை சிக்கியுள்ளது . இதனால் காவலர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.