பன்னீர் பால்கோவா உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:
பன்னீர் – 1 பாக்கெட்
கோவா – 100 கிராம்
சர்க்கரை – ½ கப்
தேங்காய் துருவல் – ¼ கப்
வெனிலா எசன்ஸ் – ½ கப்
செய்முறை:
முதலில் தேங்காயை துருவி எடுத்து கொள்ளவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் துருவலை சூடுப்படுத்தி கொள்ளவும்.
அதன் பின்பு பன்னீரை எடுத்து மிக்சிஜாரில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும். மேலும் அதே மிக்சிஜாரில் சர்க்கரையை போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
அதனையடுத்து பாத்திரத்தில் தேங்காய் துருவல், பன்னீர் துருவல், கோவா, சர்க்கரை தூள், வெனிலா எசன்ஸ் சேர்த்து கரண்டியால் நன்கு கலந்து கொள்ளவும்.
பிறகு கையில் லேசாக நெய் தொட்டு கலந்து, அதில் வைத்த மாவை எடுத்து உருண்டைகளாக உருட்டி எடுத்து பரிமாறினால் ருசியான பன்னீர் பால்கோவா உருண்டை தயார்.