நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் ஒரு சில மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில இடங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் எப்படி கொரோனா வேகமாக பரவியதோ அதுபோல தற்போதும் பரவி வருகிறது. இந்நிலையில் மட்டும் 1087 பேருக்கு கொரோனா தோற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் 1000 ஐ தாண்டியுள்ளது. இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 610 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.