பிரான்ஸ் நாட்டின் பிரதமரான ஜென் கஸ்டெக்ஸ் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பயம் குறித்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 35,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் தலைநகர் பாரிஸ் உட்பட 16 பகுதிகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப் போவதாக கூறப்படுகிறது. மேலும் ஆஸ்ட்ரோஜனகா தடுப்பூசிகளை மக்களுக்கு போடும் பணி ஆரம்பிக்கப் போவதாகவும் தடுப்பூசி குறித்து எந்த பாதிப்பும் இல்லை என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சரான ஆலிவர் வரன் தலைநகர் பாரிசில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருப்பதாகவும் தீவிர சிகிச்சை பிரிவில் 1,200 பேர் இருப்பதாக கூறினார். மேலும் இது கடந்த நவம்பரில் இரண்டாவது கொரோனா அலை உச்சத்தில் இருந்த போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர்களை விட தற்போது அதிகமாக இருப்பதாக கூறினார். மேலும் இதனால் அத்தியாவசியமற்ற நிறுவனங்கள் மூடப்படும்.
ஆனால் பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும். பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் அவர்களின் வீட்டை விட்டு வெளியே வருவதற்கான காரணத்தை படிவங்களில் குறிப்பிட வேண்டும் .மேலும் தகுந்த காரணம் இருந்தால் மட்டும் வெளியே போக வேண்டும். மேலும் நாட்டின் மற்ற பகுதிகளுக்கு செல்வதற்கு அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது.