நெல்லையில் வாகன சோதனையில் பிடிபட்ட ரூபாய் 85, 490 யை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடக்கவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு தேர்தல் விதிமுறைகளையும் , நடத்தைகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினர்களை நியமித்துள்ளார்கள். இவர்கள் தேர்தல் நெருங்குவதால் அனைத்து பகுதிகளிலும் தீவிரமான வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே பறக்கும் படையினர்கள் தேர்தல் அதிகாரி சண்முக சுந்தரம் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர் . அப்போது அங்கு சேரன்மகாதேவியில் இயங்கி வரும் தனியார் நுண்கடன் நிறுவன ஊழியரான சங்கிலி பூதப்பாண்டி என்பவர் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி 85,490 ரூபாய் கொண்டுவந்துள்ளார் . இதனால் வாகன சோதனையில் ஈடுபட்ட ஊழியர்கள் அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்து சேரன்மகாதேவி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.