நடிகை காஜல் அகர்வால் பிரபல நடிகரின் படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு , ஹிந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடிகை காஜல் அகர்வால் பிரபல தொழிலதிபர் கௌதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார்.
Welcome on board @MsKajalAggarwal pic.twitter.com/lXrB540evw
— Praveen Sattaru (@PraveenSattaru) March 18, 2021
திருமணத்திற்கு பிறகும் காஜலுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது . தற்போது காஜல் இந்தியன் 2, ஆச்சார்யா , பாரிஸ் பாரிஸ் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் பிரபல நடிகர் நாகார்ஜுனா அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.