ஜனநாயகமும், நேர்மையும் தோற்று, கர்நாடக மக்களும் தோல்வியைந்துள்ளனர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில அரசியலில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். தற்போது அங்கு எதிர் கட்சியாக இருந்த பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க இருக்கின்றது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ட்வீட்_டர் பக்கத்தில் கூறுகையில் ,
கர்நாடக மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் (எஸ்) கூட்டணியை, தங்களின் அதிகாரத்துக்கு அச்சுறுத்தலாகவும், இடையூறாகவும் சிலர் கருதினர். கூட்டணிக்கு உள்ளேயும், வெளியேயும் அவர்கள் இந்த ஆட்சி அமைந்த முதல் நாள் முதல் தங்களின் சுயநலனுக்காக அரசை கவிழ்க்க முயன்று வந்தனர்.அவர்களுடைய பேராசை இப்போது வென்றுள்ளது. ஆனால் ஜனநாயகமும், நேர்மையும் தோற்று, கர்நாடக மக்களும் தோல்வியடைந்துள்ளனர் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.
From its first day, the Cong-JDS alliance in Karnataka was a target for vested interests, both within & outside, who saw the alliance as a threat & an obstacle in their path to power.
Their greed won today.
Democracy, honesty & the people of Karnataka lost.
— Rahul Gandhi (@RahulGandhi) July 23, 2019