Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் பெண்ணிடம் சில்மிஷம்.. அடையாளம் கண்டால் உடனே தெரியப்படுத்துங்கள்.. காவல்துறையினர் கோரிக்கை..!!

லண்டனில் நள்ளிரவில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட மர்ம நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. 

லண்டனில் கிங்ஸ் கிராஸில் இருக்கும் தன் நண்பர் ஒருவரை சந்தித்துவிட்டு இளம்பெண் ஒருவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி அன்று 2:30 மணியளவில் வீடு திரும்பியிருக்கிறார். அந்த சமயத்தில் மர்ம நபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்துள்ளார். இதனால் வேகமாக நடக்க தொடங்கிய அந்தப் பெண்ணை அந்த நபர் விடாமல் துரத்தி அருகில் வந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

அதன் பின்பு அங்கிருந்து தப்பித்து சென்ற அந்தப் பெண் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கிற்கான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சியின் மூலம் புகைப்படம் ஒன்றை  காவல்துறையினர் வெளியிட்டிருக்கின்றனர்.

மேலும் இதற்கு முன்பு கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலேயே அந்த நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டது. எனினும் தற்போது மீண்டும் அந்த புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் காவல் துறையினர் இந்த நபர் இத்தாலியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் இந்த நபரை அடையாளம் தெரிந்தவர்கள் தங்களிடம் தெரிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டுள்ளனர்.

Categories

Tech |