நீர்ப்பாசனத்துறை பாஜக அமைச்சர் விடுதி ஒன்றில் அரைகுறை ஆடையுடன் பெண்ணுடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..
கர்நாடகா மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருக்கும் 60 வயதான ரமேஷ் ஜர்கிஹோலி, அங்குள்ள ஒரு ஹோட்டல் விடுதி ஒன்றில் அரைகுறை ஆடை அணிந்து இளம்பெண் ஒருவருடன் ஆபாசமான முறையில் இருக்கும் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் கடந்த வாரம் வெளியாகியுள்ளது. இதனால் கர்நாடக மாநில அரசியலில் பெரும் புயல் அடித்து உள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்,”அணைகள் குறித்து ஆவணப்படம் எடுக்கப் போவதாகவும் அதற்கு அரசு சார்பில் உதவி செய்யுமாறு” அமைச்சர் ஜெர்கின்ஹோலியை தொடர்ந்துள்ளார். அப்போது, அவர் அந்தப் பெண்ணிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி அந்தப் பெண்ணிடம் பல முறை பாலியல் உறவினை கொண்டுள்ளார் என்பது தெரியவருகிறது.
அதன் பிறகு பா.ஜ.க அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் கூறுவது,” தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சூட்டப்பட்டுள்ளன என்றும், இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதன் பின்பே நான் குற்றமற்றவன் என்பது தெரியவரும், என்று கூறியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலியும் அந்த இளம் பெண்ணும் சேர்ந்து இருந்த வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியானது. 35 வினாடிகள் மட்டுமே கொண்ட அந்த வீடியோவினை வெளியிட்டது யார் என்று தெரியவில்லை இதனால் அந்த பெண் எனது மானமும் குடும்பத்தினரின் மரியாதையும் சீர் குலைந்து போய்விட்டது. இதன் காரணமாக எனது தாய் தந்தை தற்கொலை முயற்சி செய்து கொண்டனர், அதிர்ஷ்டவசமாக அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் படுத்தியுள்ளேன். இன்னும் இதுதொடர்பாக அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுக்கின்றன. இதனால் உள்துறை அமைச்சர் பரவச ராஜ் பொம்மை இடம் எனது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க கேட்டுக் கொள்கிறேன், என்று அந்தப் பெண் வீடியோவில் கண்ணீருடன் கேட்டுக்கொண்டார்.
இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராகிய முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தனது வாக்குமூலத்தை பதிவிட்டுள்ளார். “அந்த வீடியோவில் பாலியல் காட்சிகளில் இருப்பது நான் அல்ல என்றும், இந்த வீடியோவை காட்டி என்னிடம் பணம் பறிக்க முயற்சித்தனர், அதற்கு ஒத்துப் போகாததால் காணொளி பதிவை வெளியிட்டு என் பெயரை கெடுக்க முயற்சி செய்துள்ளனர் என்று பதிவிட்டுள்ளார். இதுவரை அந்த பெண் விசாரணைக்கு ஆஜராக வில்லை என்றும் தலைமறைவாக உள்ளனர் என்றும் தெரிகிறது.
இதுபற்றி விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது திடீர் திருப்பமாக இளம்பெண் கடத்தப்பட்டதாக அவர் பெற்றோர் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதுபற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை செய்தபோது அந்த வீடியோ போலியானது என்று தெரியவந்துள்ளது. ஆனால் அந்த இளம்பெண் கடத்தப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்பெண்ணின் குடும்பத்தினர் காவல்துறையிடம் எங்களது மகளை மீட்டு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வேதனையில் சென்றனர். இதனை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனி படை ஒன்றினை அமைக்கப்பட்டு அந்த இளம்பெண்ணை தேடும் பணி தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்த வீடியோ அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.